மஸ்கெலியா கிலன்டில் தோட்ட லெங்கா பிரிவில் வசிக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் இன்று காலை முற்பகல் கருப்பு நிற கொடிகள், பதாதைகள் ஏந்திய வண்ணம் தோட்டத்தில் இருந்து கோஷம் எழுப்பியவாறு சாமிமலை ஓல்ட் டன் பிரதான வீதி வரை வந்தனர்.
சுமார் 5 கிலோ மீற்றர் துஸரப்பாதையைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர நாளில் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர், முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் இணைந்து இந்த வீதியை செப்பனிட அடிக்கல் நாட்டியபோதும் வீதி செப்பனிடவில்லை.
நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் இவ் வழியாக கொண்டு செல்ல தொட்டில் கட்டி தூக்க வேண்டி உள்ளது.1990 நோயாளர் காவு வண்டி பிரதான வீதியில் வந்து நின்று விடும்.
சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நோயாளர்களைத் தொட்டில் கட்டி தூக்கி வந்து நோயாளர் காவு வண்டியில் ஏற்ற வேண்டும்.
அவ்வாறு கொண்டு வரும் வேளையில் பலர் மரணம் அடைந்துள்ளனர். சில கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் இடைநடுவில் ஏற்பட்டது.
கடந்த மாதம் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டனர்.
நாடு 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் எமக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
நாட்டின் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து எமது தோட்ட வீதியை செப்பனிட உடன் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
மஸ்கெலியா நிருபர்
