பாதிக்கப்பட்ட 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி இன்று (13) வழங்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 வட்டாரங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட, 164 குடும்பங்களுக்கு சுமார் 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
இன்று (13) பிற்பகல் 3 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் யோகேஸ்வரன்,தினேஷ்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.



மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக்,வட்டார உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார, மஸ்கெலியா கிராம உத்தியோகத்தர் குணதிலக்க, அம்பகமுவை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் மத்திய மலைக்காட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ராஜ்குமார், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி சரண்யாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கமைய நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
