மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று நீண்டகால இடைவெளிக:குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்திற்குத் தாழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏனைய இரண்டு வான் கதவுகள் திறந்து விட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டது.
இவ்வாறு திறக்கப்பட்ட வான் கதவு ஒன்று தற்போது 3 அங்குலம் மட்டுமே திறந்து விட பட்டு உள்ளது என மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
