மழைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று 9 ஆம் திகதி காலை அமைதியா நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் மாணவ மாணவிகள் வெகு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான பரீட்சை மண்டபத்துக்குக் கொட்டும் மழையிலும் மாணவர்கள் பெற்றாருடன் வருகை தந்திருந்தனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
