மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
மஸ்கெலியா, நோட்டன் பகுதியில் கனமழை நேற்று மதியம் முதல் பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை முதல் விமலசுரேந்திர நீர்த் தேக்கத்தின் நீர் நிரம்பி, மதகு வழியாக நீர் வெளியேறி வருகிறது.மேலும், மவுசாகலை, கென்யோன், புரோட்லேண்ட் லக்சபான, பொல்பிட்டி, நவலக்சபான, கலுகலை,காசல்ட்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில், பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
