மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (27) உறுதியளித்ததாகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார்.
அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனறைய தினம் (27/03/2026) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின்
பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் பெருநதோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டு மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
அமைச்சர் ஆனந்த் விஜயபால பதில் அளிக்கும்போது இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தமிழ் உத்தியோகத்தர்களை வெகு விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.



