மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கு சரிவு பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கன மழை பெய்தது வருகிறது.
இதன் காரணமாக நீர்த் தேக்கப்பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது .
மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி நிரம்பியுள்ளது. கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது.
விமலசுரேந்திர நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது.
லக்சபான நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது.காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை இன்னும் 6 அடி நிறைய உள்ளது
மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்து உள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் பனி மூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்
