மலேசியாவின் சபா மாநிலக் கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியா மட்டுமன்றி, அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளன.
சபா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அல்லது மேலதிக பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
