மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, தனது இல்லத்தில் கீழே விழுந்ததால், கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6 காலை தவறுதலாகக் கீழே விழுந்த அவரைத் தேசிய இதயக் கழக (ஐஜேஎன்) மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவலை டாக்டர் மகாதீர் தரப்பிலிருந்து அவரது பேச்சாளர் சுஃபி யூசோஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.
