மறைந்த பிரபல சினிமா பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதை திரை உலகத்தினர் பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி, செய்தி,விளம்பரம், எழுதுபொருள், அச்சுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளை வெளியிட்ட போது, இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் 2.50 கோடி இந்திய ரூபாயில் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
