மகசீன்,குருவிட்டை சிறைச்சாலைகளில் மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு மகசீன், இரத்தினபுரி குருவிட்டை சிறைச்சாலைகளில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் மூவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குருவிட்டை சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் உயிரிழந்து கைதிகள் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதிகள் 11பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு குருவிட்டை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில், அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்தச் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் பொலிஸாரினால் கண்ணீர்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
