புசல்லாவை டேசன் தோட்டத்தில் புதிய வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
புசல்லாவை டேசன் தோட்டத்தில் ‘தித்துவா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று (31) நடைபெற்றது.
விவசாய, கால்நடை வளங்கள், காணி,நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் செரீப், தொழுவை பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் உடபளாத்தை பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
