Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • Lifestyle
  • புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிப்பு

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிப்பு

Malaikuruvi November 17, 2025 1 minute read
புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிப்பு

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்களின் அறிக்கை

இன்றைய உலகில் வேகமாக பரவிவரும் சுவாசநோய்களில் COPD (Chronic Obstructive Pulmonary Disease) மிகுந்த கவலையளிக்கும் ஒன்றாகும். நுரையீரலின் காற்றுக்குழாய்கள் குறுகி, மூச்சு சுதந்திரமாக செல்ல முடியாத நிலையில், இந்த நோய் காலப்போக்கில் அதிகரித்து வாழ்க்கை தரத்தையே பாதிக்கக்கூடியது. இதனை காலதாமதமின்றி உணர்ந்து, சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதில்,

1. Chronic Bronchitis

காற்றுக்குழாய்களில் அழற்சி ஏற்பட்டு சளி அதிகரிப்பதால் காற்றோட்டம் குறைகிறது.

2. Emphysema

நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் (Alveoli) சேதமடைந்து சுவாசத்திறன் குறைகிறது.

இரண்டும் சேர்ந்து மூச்சு விடுவது சிரமமாகும் நிலையை உருவாக்குகின்றன.

அடிக்கடி மூச்சுத்திணறல், தொடர்ந்த இருமல், அதிக சளி, வீசும் சத்தம் (Wheezing), உடல் சோர்வு, நெஞ்சு இறுக்கம், அடிக்கடி சுவாசத் தொற்று, உடற்பயிற்சி/நடப்பு செய்யும் போது மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் நீண்டகாலமாக இருந்தால் அவை COPD-க்குரிய அடையாளமாக இருக்கலாம். வயதுதான் காரணமென தவறாகக் கருதி தாமதமாக சிகிச்சை பெறுவதே மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது.

முக்கியமாக புகைபிடித்தல் அல்லது புகைபிடிப்பவரின் முன்னால் இருத்தல், தொழிற்சாலை புகை, தூசி, இரசாயன வாயுக்கள், டீசல் புகை, காற்று மாசுபாடு போன்றவற்றால் COPD வருகிறது

நிரந்தரமாக குணப்படுத்த முடியாவிடினும், அறிகுறிகளை கட்டுப்படுத்தி நோயின் முன்னேற்றத்தை மிதமாக்கி, வாழ்க்கை தரத்தை அதிகரிக்க முடியும்.

புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்துதல், பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உடலை வலுப்படுத்தும்

COPD என்பது “முடிந்துவிட்டது” என்று எண்ண வேண்டிய நோய் அல்ல. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சரியான மருந்துகள், உடற்பயிற்சி, மற்றும் புகைபிடிப்பை நிறுத்துதல் ஆகியவற்றின் உதவியுடன், நோயின் முன்னேற்றத்தை நிறுத்தி, நல்ல தரத்தில் வாழ முடியும்.

“மூச்சு திணறல் நீடித்தால் அதை சாதாரண இருமல் என்று எண்ணாதீர்கள். உடனே பரிசோதனை செய்யுங்கள்.”

சித்த மருத்துகள் அரச சித்த ஆயுள்வேத யுனானி வைத்தியசாலையின் மருத்துவர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்

ஆடாதோடை கஷாயம்- இவை மூச்சுக்குழாய்களில் இருக்கும் குறுக்கு நிலையைத் தளர்த்தி சளியை வெளியேற்ற உதவும்.

தாளிசபத்திரி கஷாயம்- நீண்டகால இருமல் மற்றும் சளி பெருக்கம் உள்ளவர்களுக்கு உகந்தது.

தாளிசாதி சூரணம் – இருமல், சளிக்காக

திரிகடுகாதிசூரணம்- அஜீரணத்தால் ஏற்படும் காசம் மற்றும் சளியை குறைக்கும்

அதிமதுரம் சூரணம்- மூச்சின் விடுதலைக்கு உதவும்.

கபசூர குடிநீர்- சளி, தொற்றுக்களுக்கான ஆதரவு தரும்

COPD ஒரு நீண்டகால நோய் என்பதால் சித்த மருந்துகள் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அளவு, காலம், மருந்து என்பன COPD யின் நிலை, வயது, நுரையீரலின் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.

நவீன மருத்துவ சிகிச்சையையும் கட்டாயம் தொடர வேண்டும்.

தொகுப்பு: அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

கௌசல்யா

Post navigation

Previous: பாதுகாப்பு கருதியே புத்தர் சிலை அகற்றப்பட்டது – அமைச்சர் ஆனந்த
Next: மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Related Stories

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

Malaikuruvi February 28, 2026
ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

Malaikuruvi February 28, 2026
உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! - ஆசாரி கணேசன்

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! – ஆசாரி கணேசன்

பன்விலை ம. நவநீதன் February 18, 2026

Trending News

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 1

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 2

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 3

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 4

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 5

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |