பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொதி வழங்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்ட10 வட்டாரங்களில் 15 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்11.30 இற்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில்,சுமார் 5000/= பெறுமதியான பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.


தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் கணபதி நகுலேஸ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்,சங்கத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிகளை ‘ஹெப்பி ஹோம்’ நிறுவனத்தின் முகாமையாளர் ரவீந்திரன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர் செ .தி. பெருமாள்
