பன்விலை நகரில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (20) மாலை பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியில் இருந்த இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக நால்வர் காயமடைந்ததனர்.
காயமடைந்தவர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கண்டி மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டனர்.
பன்விலை நிருபர்
