உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (05) பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரியன் நற்பணி மன்றத்தின் மூலம் 30,000 மரகன்றுகள் நாட்டி இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
‘இயற்கையான சூழலை மீட்டெடுக்க, நமது வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் பூச்சிகளையும் பறவைகளையும் ஈர்க்கும் விதமாக சிறு தோட்டங்களை உருவாக்கலாம்’ என்ற கூற்றுக்கு இணங்க மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் லிந்துலை ராஜ்குமார், கெலிவத் மாரிமுத்து, திம்புள்ளை சசிகலா,அதிபர் குமரன்,ஆசிரியர் பாலசுந்தரம், தரம் 9 மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.






