மரம் நடுவோம் மண்வளம் காப்போம், சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம், வளமான நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் 13.02.2026 செல்மின் அமைப்பின் 10, 00,000 (பத்து லட்சம்) மரக்கன்றுகள் நடுகை வேலைத்திட்டதில் சூரியன் அதிரடி நற்பணி மன்றமும் செல்மின் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மரம் நடும் நிகழ்வானது பத்தனை, தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதிகளாக செல்மின் அமைப்பின் ஸ்தாபகர் அருண் சண்முகலிங்கம், இலங்கையின் செல்மின் அமைப்பின் தலைவர் வாமதேவன் அகிலன்,, சூரியன் அதிரடி மன்றத் தலைவர் இராஜ்குமார், செயலாளர் மாரிமுத்து சசிகலா, பாடசாலை அதிபர் , பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
லிந்துலை இராஜ்குமார்






