சூரியன் உதிக்கும் தருணத்திலே – பல
மலர்கள் மலர்ந்திடும் பாரடி !
மண்மேல் பச்சைப் பசேலென
பல பயிர்கள் முளைக்குது தானடி!
மை போல் மேகக் கருக்கலுடன்
மழையும் பொழியுது காணடி
மழையும் பொழிந்து முடிந்ததும்
மலைபோல் செழிப்பும் நிறையுதடி!
பசுமை நிறைந்த பாரினிலே – பல
கொடுமை நடக்குது பாரடி!
பசுமையைப் போர்த்திய காட்டையே
தீயிட்டுக் கொளுத்துகிறான் தானடி!
இப்படிப் போனால் பாரிலே
இருக்கா காடுகள் அரிதடி!
மலர்கள் என்பவை கடவுளடி
மரங்கள் என்பவை குறிஞ்சியடி!
நாளைய சந்ததி நாமடி
நெகிழியை நீக்க வேணுமடி!
நீள்மீள் சுழற்சிக் கடித்தளமிட்டு
நிறைவாய்க் காட்டைக் காப்போமடி!
.
பன்விலை அக்ஷயா நவநீதன்
