நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கன மழையுடன் இடி மின்னலுடன் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது.
சிவனொளிபாத மலை பருவ காலம் நிறைவு பெற உள்ள வேளையில் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் கினிகத்தேனை, அம்பகமுவை, நோட்டன், மஸ்கெலியா, ஹட்டன், நல்லதண்ணி, பொகவந்தலாவை, நோர்வூட், கொட்டகலை, லிந்துலை, நானுஓயா, நுவரெலியா பகுதியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.
இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறும் வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரச் செய்து வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மரக்கறிகளின் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளன.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்


