நுவரெலியாவில் இன்று மிகவும் குறைவான வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வெப்ப நிலை 5.0 பாகை செல்சியஸாகப் பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் குறைந்த வெப்ப நிலை எற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது.
பண்டாரவளையில் 12.5°C ஆகவும், பதுளையில் 14.8°C ஆகவும் பதிவானதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
