நீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் புப்புரஸ்ஸை டெல்டா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸை – டெல்டா தோட்டத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி, நீர் என நினைத்து இரசாயனத்தை அருந்தியதால் உயிரிழந்தார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று (24) கம்பளை வைத்தியசாலையில் இடம்பெற்றபோது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்குத் தாகம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டின் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை நீர் என நினைத்து அருந்தியதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி இரசாயனத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவரது வாயிலிருந்து நுரை வெளியேறியதாகவும், உடனடியாக பன்விலதன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவரது தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
