நிவாரணம் வழங்குவதில் பாகுபாடே கிடையாது என்று பன்விலை பிரதேச செயலர்நிலூஷா மனோரத்ன தெரிவிக்கின்றார்.
[நிவாரணம் வழங்கலில் கண்டி பன்விலைபிரதேச செயலகம் பாகுபாடு காட்டுவதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
பன்விலை பிரதேச செயலகப் பிரிவில் சுமார் எண்ணாயிரம் குடும்பங்ககள் வாழ்ந்தபோதிலும் அவர்களில் சுமார் மூவாயிரம் பேர் மட்டுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்படாத ஏனையவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குப்படுவது போன்று அல்ல. அதனால், அவர்கள்; குறைபடக் கூடும் என்று சுட்டிக்காட்டுகிறார் பிரதேச செயலாளர்.
பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோட்டப்புறப் பகுதிகளிலுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நிவாரணப் பொதி அளவுகளிலும் பெறுமதிகளிலும் வேறுபாடுகள் காட்டப்படுவதாகவும் மாவுசா,றாக்சாவ போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவர்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து பன்விலை பிரதேச செயலாளர் நிலுஷா மனோரட்ணவை சந்தித்து மக்கள் முறைப்பாடு தொடர்பாக கேட்டபோத மக்கள் குறைபாடுகளை முற்றாக நிராகரித்தார்.
நிவாரணப் பொருட்களை அதிகம் பெற்றவர்கள் குறைவாகப் பெற்றவர்கள் என்ற ஒப்பீடு பிழையானது என்றும் அவர் சொன்னார்.
பன்விலை ம. நவநீதன்
