நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கலை நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, இன்று (05) நாவலப்பிட்டி, திஸ்பனை சந்திப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாணவர்கள் 13 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவிகள் 11 பேரும் ளும், மாணவர்கள் இருவரும் அடங்குவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வானின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே. எம். குலதுங்கவின் வழிகாட்டலில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா

