நாமலுக்கு எதிரான பணமாற்று மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணமாற்று மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவும் ஏனைய பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அடுத்த வழக்கு திகதியில் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
