இலங்கை வான் படை தனது பவள விழாவை (75ஆம் ஆண்டு நிறைவை )முன்னிட்டு, எதிர்கால தலைமுறையின் தகவல் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் தகவல் தொழினுட்ப ஆய்வகங்களை அமைத்து வருகிறது.
இன்றைய தினம் (27) நானுஓயா டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா விததியாலயத்தில் தகவல் தொழினுட்ப ஆய்வகம் திறந்துவைக்கப்பட்டது.
வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த சமூக சேவைத் திட்டம், வான்படை தகவல் தொழில்நுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
முக்கிய பங்களிப்பாக, பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை உயர்த்தும் பொருட்டு ரூபாய் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வகமொன்றை நிறுவி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது.
அம்பாறை மங்களாராம மகா வித்தியாலயம்,மட்டக்களப்பு கொட்டாய்முனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் இரண்டை மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் இரண்டாம் கட்டமாக, நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் 2026 மார்ச் 27ஆம் திகதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த சமூக சேவைத் திட்டம், வான்படை தகவல் தொழில்நுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
வான்படை தொழில்நுட்ப அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் தொழில்முறை திறனும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற ஏதுவாக அமைந்தது.
மின்னியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் மேற்பார்வையில், தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் குழு கேப்டன் சாணக சூரியாரச்சி அவர்களின் கண்காணிப்பின் கீழ், இலங்கை வான்படை பிட்டுரலாகல முகாமின் கட்டளை அதிகாரி குழு கேப்டன் இந்திக ஜயசுந்தர அவர்களின் தலைமையில் இந்த புதிய ஆய்வகத்தின் கட்டுமானமும் உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.
இந்த குளிரூட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை வழங்குகிறது.
இதில் 15 மேசை கணினிகள் மின்சாரம் வழங்கும் UPS அமைப்புகள் மற்றும் முழுமையான வலையமைப்பு வசதிகள் உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த திறப்பு விழாவில் மின்னியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில், வான்படை அதிகாரிகள், நிதியுதவியாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர். எப். எம். சுஹெல், எஸ். கௌசல்யா








