தொழில் இழந்தவர்களுக்கு நவயுகம் சமூக அபிவிருத்தி மன்றம் நிவாரணம் வழங்கியது.
தித்வா அனர்த்தத்தினால் நகர்ப்புறங்களில் தொழிலை இழந்தவர்களுககான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புசல்லாவை தொரகலையில் இடம்பெற்றது
ஹட்டன் நவயுகம் சமூக அபிவிருத்தி மன்றம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை நேற்று (02) வழங்கிவைத்தது.
நிவ் பீகொக் தோட்டம், சப்லி தோட்டம் , இராமன்துரை தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொரகல கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தொழிலற்று சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் இளைஞர் யுவதிகளின் நிலை தொடர்பாக விடுத்த வேண்டுகோளையடுத்தே இவர்களுக்கு நிவாரணப் பொருட்ஙள் வழங்கி வைக்கப்பட்டன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்




