தியகலை – கடவலை பகுதியில் பொதுமக்க்ள் பயன்படத்தும் ஒர் இடம் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு மாசுபடுத்துப்படுத்தப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
கினிக்கத்தேன நோட்டன் பகுதியில் உள்ள தியகலை கடவலை இரண்டிற்கும் இடையில் உள்ள பகுதியில். கடந்த 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய மண்சரிவு இடம்பெற்று கடந்த கால அரசாங்கதால் இவ்விடம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
அது மட்டுமன்றி பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் அவசர தேவைக்காக அம்பேகமுவ பிரதேச சபையினால் ஒரு நீர்க் குழாய் மக்களின் வரி பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி பொருத்தித் தரப்பட்டது.
ஆனால், இப்போது கடவலை பகுதியில் இயங்கி வரும் ஓர் உணவகத்தில் அந்த நீர்க் குழாய் உரிமைபடுத்தப் பட்டு அவர்கள் வசமாக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்க் குழாயை மக்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் அவ்விடத்தில் உணவகத்தில் ஒதுக்கப்படும் உணவு கழிவுகள் மற்றும் lunch sheet குப்பை கூளங்களை அங்கே வீசிச் செல்கிறார்கள்.
இந்த இடமானது வெளிநாட்டு, உள் நாட்டு சுற்றுலாப்பயணிகள், சிவனாளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள், வாகன சாரதிகள் சாப்பிட்டு நீர் அருந்தும் இடமாக இருந்தது.
இப்போது இங்கே வருபவர்களுக்கு இங்கே இருக்கும் குப்பைகளை பார்த்தாலே முகம் சுளிக்கும்படி உள்ளது. இவ்வாறான செயல்களினால் அப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுடைந்து வருகிறது.
.இது அம்பகமுவ பிரதேச சபைக்குச் சொந்தமான நீர்க் குழாய். இதை இவர்கள் தமது தனிப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
மேலும் இப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பொலித்தீன், பிளாஸ்டிக் பொருள்கள் மழைக்காலத்தில் களனி கங்கைக்கோ அல்லது மகாவலி கங்கைக்கோ சென்றடையும் வாய்ப்பு உள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



