ஸ்ரீ தங்கமயில் தர்மசாஸ்தா யாத்திரை குழுவினரால் நடத்தப்படும் .10ஆம் வருட மண்டல பூஜை
01.01.2026 – வியாழக்கிழமை நடைபெறுகிறது.
நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17ஆம் நாள் (2026.01.01) வியாழக்கிழமை திரயோதசி ரோஹிணி நட்சத்திரம் பிரதோஷம் (காலை 7.59 தொடக்கம் 10.00 வரை ) யோகமும் கூடிய சுப நன்னாளில் தலவாக்கலை தங்கமயில் தர்மசாஸ்தா குழுவின் பத்தாவது வருட ஐயப்பன் இரதோற்சவ பவனி நடைபெறுகிறது.
தலவாக்கலை மல்லியப்பு செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க நெய்விளக்குகள் மணக்க கருடன் அண்டத்தில் உலாவ கருப்பண்ணசாமி முருக்கு மீசையுடன் அக்னி சட்டியுடன் வாளேந்தி காவல்புரிய ஐயப்பன் தேர் உற்சவம் வீதிஉலா விழா தலவாக்கலை நகர பிரதான வீதியின் ஊடாக பிரதான முச்சந்தியை கடந்து தங்கமயில் தர்மசாஸ்தா பீடத்தை அடைய உள்ளது
கிரியாகால நிகழ்வுகள்
காலை 7.59 தொடக்கம் 10.00 வரை புன்னியாக வாஜனம் கனபதி ஹோமமம் தொடர்ந்து விஷேடதிரவிய ஹோமம் மகா பூரணாகதி கும்ப உத்தாபணம், வீதி பிரதட்ஷனம் சங்காபிஷேகம் என்பனவற்றோடு மு.ப 11 மணிக்கு விஷேட தீபாராதணை ஐயப்பனுக்கு ஆனந்த மிகு பஜனை படி பூஜை அன்னதான பூஜை என்பன இடம்பெற்று குருசுவாமியின் நல்லாசியுரையோடு அடியவர்களுக்கு விபூதி பிரசாதம்மும் அன்னதானமும் வழங்கப்படும். “பி.ப 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்”
இப்புனித நன்நாளில் அனைவரும் வருகை தந்து அனைத்து பூஜைகளிலும் கலந்து ஐயப்ப சுவாமியின் திருவடி பணிந்து போற்றி வாழ்வில் சகல சம்பத்துக்களும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ திருவருட்கடாஷம் பெற்றுய்யுமாறு இருகரங்குவித்து பணிவாக பக்தியுடன் அழைக்கின்றார்கள்
கௌசல்யா
