பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவனில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக டெவன் அருவிக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையாகி உள்ளது.
அத்தோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு கபானாக்களும் தீயினால் முழுமையாக கருகிவிட்டன. விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.
தீப் பரவல் காரணமாக இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கபானா உரிமையாளர் தெரிவித்துள்ளார் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா.

