சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!
நுவரெலியா சீதாஎலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வாகனங்கள் சீறிப்பாய்வதைப் பற்றி இதற்கு முன்னரும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தோம்.
கடந்த 11 ஆம் திகதி ஒரு 11 வயது சிறுவனை ஓட்டோ ஒன்று முட்டி மோதித் தள்ளிவிட்டு ஓடோடிப் பறந்துவிட்டது. இப்போது ‘சிசிடிவி’ காட்சியை வைத்துப் பொலிஸ் ஓட்டோ சாரதியைப் பிடித்திருக்கிறது.
சீதை அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் அவர்களே! நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள். வீடியோவை விடுங்கள், நீங்கள் ஆலய முன்றலில் நிற்கும்போது எத்தனை முறை கண்டிருப்பீர்கள், சீதையையே மதிக்காமல் வாகனங்கள் ஆலயத்தைக் கடந்து படு வேகமாகச் செல்வதை.
இதைக் கட்டுப்படுத்த ஒரு வேகத்தடை (Speed Breaker/Road Hump) பாதையின் பாதசாரிகள் கடவைக்கு இரு புறமும் அமைத்தாலே போதுமானதே!
அப்படிச் செய்தால் மக்களுக்கும் பாதுகாப்பு, சீதைக்கும் மரியாதை அல்லவா!
இதனை நுவரெலியா பொலிஸாருடனும் உள்ளுராட்சி மன்றத்துடனும் பேசிச் செய்ய முடியாதா என்ன?
இதற்கு ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பதவியே போதுமானதே!
- மலைக்குருவி
