சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களுக்குத் தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால். சனிக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.
நோட்டன் தியகல பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் சபையின் அருகில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த கமகே தலைமையில் நடைபெற்றது.
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களால் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கிளீன் ஸ்ரீ லங்கா நடவடிக்கை பற்றித் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பயணிகளுக்குத் தாகசாந்தி பானமும் வழங்கப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்






