2025/2026 சிவனொளிபாதமலை பருவ காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவு
தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இன்று வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் 31 ஆம் திகதி காலை 10.30 தொடக்கம் 1.30 வரை வரும் சுப வேளையில் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து பூஜை பொருள்கள் என்பன இரத்தினபுரி ஶ்ரீபலாபத்தலை குருவிட்ட வழியாகவும் நல்லதண்ணி நோட்டன் வழியாகவும் நல்லதண்ணி பொகவந்தலாவை பலாங்கொடை வழியாகவும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் மீண்டும் 2026/2027 இற்கான சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்



