சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே. புஸ்பராஜ் ஆகிய செய்தியாளர்கள் இருவர் உட்பட மலையகத்தைச் சேர்ந்த 14 பேர் கலாவிபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 15 வருடங்களுக்கு மேல் ஊடகவியலாளர்களாக மட்டுமன்றிப் பல்வேறு சமூக நலப் பணிகளிலிலும் ஈடுபட்டு வந்தமைக்கே இவ்விருது வழங்கி மூவரும் கெளரவிக்கப்பட்டனர்.
மலையக தியாகிகள் ஒன்றியம் ஒரு இலட்சம் பேரை கௌரவிக்கு முகமாக அதன் முதல் நிகழ்ச்சி மார்ச் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
விருதுபெற்ற மலையக ஊடகவியலாளர்களுக்கும் ஏனையோருக்கும் மலைக்குருவியின் மனமார்ந்த வாழ்த்துகள்!





