வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டு ஏற்படவிருந்த விபத்தை பஸ்ஸின் சாரதி தன் சாமர்த்தியத்தால் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இன்று (02) நிகழ்ந்துள்ளது.
அந்தத் திருப்பத்தில் பஸ்ஸைத் திருப்ப முயற்சித்தபோது பாரிய சத்தம் கேட்டதால், பஸ்ஸை நிறுத்திவிட்டுச் சோதித்துப் பார்த்துள்ளார் சாரதி.
அப்போது பஸ்ஸின் அடிச்சட்ட எக்சல் உடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் தன் சாமர்த்தியத்தால் அதனைத் திருத்திக்கொண்டு மீண்டும் பஸ்ஸை இயக்கியிருக்கிறார்.
இல்லாவிட்டால், பஸ் மண் சரிவு நிகழ்ந்த அந்தப் பள்ளத்தில் உருண்டு விபத்து ஏற்பட்டிருக்கும்.
அந்தச் சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் 40 பயணிகள் இருந்துள்ளனர். கடந்த வாரம் தலவாக்கலை பகுதியில் வேகத்தடை இயங்காத பஸ்ஸை சாரதி தன் சாமர்த்தியத்தால் நிறுத்தி 80 பேரின் உயிரைக் ககாப்பாற்றினார்.
இன்றைய சம்பவத்திலும் ஓர் இபோச பஸ் தான் உடைந்துள்ளது. எனவே சிடிபீ டிப்போக்காரர் சற்றுக்கவனம் எடுக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.
