கொழும்பு கொம்பஞ்ஞ வீதியில் புதிய மேம்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தசா இந்தப் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 321 மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்டது இந்த மேம்பாலம்.
பாலத் திறப்பு விழாவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
