கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
