கொட்டகலை மக்களுக்கு உதவுமாறு இந்திய உதவி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிகர் திருமதி எஸ்.வி. சரண்யாவை கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் சந்தித்து கலந்துரையாடி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரண உதவிகளோடு, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான மடிகணினிகள் மற்றும் இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல், விவசாயம், பால் சார்ந்த உற்பத்திகள், வீட்டுக் கைத்தொழில் போன்ற சுயதொழில்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றைவழங்கி உதவுமாறும்வை தொடர்பில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன், செயலாளர் விஜேசுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
