கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் மரம் நடுகை தினம் இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் மூன்றாம் நாளையொட்டி (16.09.2026) “சுற்றாடலும் மர நடுகை தினம்” எனும் கருப்பொருளின் கீழ் கொட்டகலை பிரதேச சபை வளாகம் தொடக்கம் கொட்டகலை நகரம் வரையில், ஓசோன் படை பாதுகாப்பு தொடர்பான நடைபவனி,கொமர்சல் ஈரநிலப் பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் யாகுல மேரி ,உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன் , பொன்னையா ரவிச்சந்திரன் ,சுரேஷ் , லெட்சுமன் விஸ்வநாதன் , கணபதி கண்ணதாசன், அமித்த ஆனந்த, சுப்பையா மகேந்திரன், கோவிந்தராஜ் நேசமலர், சாந்தினி , ரசிகா ஜீவனி, ராஜேந்திரன் , செயலாளர் சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
