கொட்டகலை கொமர்ஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று (21)அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க, சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவினூடாக, மாகாண சபை நிதியத்தில் ரூ. 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதை அபிவிருத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி, பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
