கொட்டகலை எதன்சைட் பாதை அபிவிருத்தி இன்று (17) அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவினூடாக, மாகாண சபை நிதியத்தில் எதன்சைட் பாதை அபிவிருத்திக்கு ரூ. 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இந்தப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரன், தோட்டப் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
