குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம் பெற்றது.
சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த எம்பிலிபிட்டியைச் சேர்ந்த 20 வயதுடைய ஆடவர் ஒருவரும் 19 வயது, 29 வயது உடைய பெண்கள் இருவர் அடங்கலாக மூவர் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் மூவரும் நல்லதண்ணி பொலிசாரால் அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
