கினிக்கத்தேன பவளமலை அருள் மிகு மங்கள விநாயகர் திருக்கோயில் ஜீர்ணேத்தாரண அஷ்ட பந்தன மஹா குடமுழுக்கு பெரு விழா எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறுகிறது.
கினிகத்தேன பவளமலை எனும் புண்ணிய பூமியில் எழுந்தருளி பக்தர்களுக்கு குறைநீக்கி நல்லருள் புரிந்து வரும் மங்கல விநாயகர் சுவாமிக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கார்த்திகை 11 ஆம் நாள் 27/11/2025 வியாழக்கிழமை அவிட்டம் நட்சத்திரம் வளர்பிறை சப்தமி திதியில் காலை 8.30 முதல் 9 .48 வரை வரும் தனுலக்கின சுப முகூர்த்த வேளையில் மஹா குடமுழுக்கு விழா நடைபெறும்.
கிரியாகால நிகழ்ச்சிகள்:
23/11/2025.
காலை 8.30, கணபதி ஹோமம் குடமுழுக்கு விழா பூஜை நிகழ்வு ஆரம்பம்.
24/11/2025.
காலை 8.30 பூஜைகள் ஆரம்பித்து மாலை 6.00 மணிக்கு குப்பையாக சாலை பிரவேசம் திருமுறை பாராயணம் பிரசாதம் வழங்கள்.
25/11/2025.
எண்ணெய் காப்பு காலை 10.45 முதல் 26 ம் திகதி மத்திய 12.45 வரை மாலை 5.30 மங்கள விநாயகர் வழிபாடு வருன கும்ப பூஜை தீப ஆராதனை திருமுறை பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கல்.
26/11/2025.
மாலை 5.00 மணிக்கு யாக பூஜை ஸ்ருபஷாகுதி தீப ஆராதனை திருமுறை பாராயணம் விபூதி பிரசாதம் வழங்கள்.
27/11/2025.
கார்த்திகை பதினோராம் நாள் காலை 6 மணிக்கு மங்கல கணபதி வழிபாடு புண்ணியா வாசணம் யாக பூஜை ஹோமம் மஹா பூர்ணா குதி விசேட தீப ஆராதனை வேத ஸ்தோத்திரம் திருமுறை பாராயணம் அந்தர் பலி பகிர் பலி நாத தாள கீத வாக்கிய சமர்ப்பணங்கள் யாத்திரா தானம் கும்ப உத்தாபனம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து காலை 8.30 முதல் 9.48 வரை உள்ள சுபமுகூர்த்த வேலையில் அடியார்கள் அரோகரா கோஷம் விண்ணதிர வேதம் ஓத மங்கல வாத்தியம் முழங்க இராஜ கோபுரம் ஸ்தூபி விமான அபிஷேகம் கும்ப வீதி பிரதட்சணம் மூல ஆலய பிரவேசம் ஆவாகனம் முகூர்த்த தானம் குடமுழுக்கு நடைபெறும். பின்னர் மஹேஸ்வர பூஜை விஷேட தீப ஆராதனை நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப் பட்டு அடியார்க்கு அன்னதானம் வழங்கப்படும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
