காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கருப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக செயல்பட்ட பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதிப் பொலிஸ் மாஅதிபரைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும் பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
