கம்பஹாவிலிருந்து சிவனொளிபாத மலைக்குத் தரிசிக்க வந்த பெண் ஒருவர் இன்று (29) காலை சிவபதம் அடைந்தார்.
இச் சம்பவம் இன்று காலை 7.30 இற்கு இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கம்பஹா,இம்புல் கொட பகுதியில் உள்ள தமயந்தி வயது 65 என்ற பெண் நேற்று 28 ஆம் திகதி இரவு தனது குடும்பத்துடன் சிவனடி பாத மலைக்குச் சென்று தரிசனம் செய்தார் பின்னர் மீண்டும் திரும்பி வரும் போது மாகிரிதம்ப பகுதியில் வைத்து திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.
அவரது உடலம் நல்லதண்ணி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அம்பியுலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
