கந்தப்பளை கோர்ட்லொட்ஜ் த.வி புனரமைத்துக் கையளிக்கப்பட்டது.
The School Craft” திட்டத்தின் கீழ் கந்தப்பளை கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் புனரமைப்புசெய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்தியா – றொட்டரி கிளப் மகாபலிபுரம்,இலங்கை – றொட்டரி கிளப் மிட்-சிட்டி, கொழும்பு ஆகியவற்றின் இணைந்த மனிதாபிமான முயற்சியான “The School Craft” திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை கோர்ட்லொட்ஜ் தமிழ் வித்தியாலயம் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக நேற்று (12) கையளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கையளிக்கப்பட்ட இந்தப் பாடசாலை மண்டபம், பின்னர் ஏற்பட்ட தித்துவா சூறாவளி,மண்சரிவு அனர்த்தத்தின் போது சுமார் 250 பேருக்கு நிவாரண மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பாடசாலையின் அடுத்தகட்ட அபிவிருத்தியின் கீழ், ஐந்து வகுப்பறைகள் புனரமைப்பு, நவீன Smart Classroom அமைத்தல், பாடசாலை இசைக்குழுவிற்கான இசைக்கருவிகள் வழங்குதல், பாடசாலை கட்டடத்திற்குப் புதிய வர்ணம் பூசுதல்,அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருள்கள், விளையாட்டு உடைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கௌசல்யா
