கண்டியிலிருந்து போட்டிக்கு ஓடிய பஸ்கள் கினிகத்தேனையில் விபத்துக்குள்ளாகின.
கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இன்று (15) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பயணிகள் எவருக்கும் காயங்களோ பாதிப்புகளோ ஏற்படவில்லை.
இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தமையினால், முன்னால் சென்ற பேருந்தின் பிடரியில் மற்றைய பேருந்து மோதியதாக பயணியொருவர் தெரிவித்தார். பஸ் மோதியதோடு ஓட்டுநர்களின் ஓட்டப்போட்டி முறிந்துபோனது.
விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ்சார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயர்தரப்பரீட்சைக்கும் பிரத்தியேக வகுப்புக்கும் செல்லும் மாணவர்களும் பயணிகளும் பஸகளில் பயணித்தனர். எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.எனவும் அந்தப் பயணி குறிப்பிட்டார்.
செ. தி. பெருமாள், கௌசல்யா
