மஸ்கெலியா சாமிமலை -ஸ்காப்றோ தோட்டத்தின் முக்கியத்துவமிக்க ஓர் இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் பொருத்தப்பட்ட தெருவிளக்கைக் காணவில்லையெனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.
அந்த விளக்கை பிரதேச சபையைச் சேர்ந்த ஒருவரே தனக்குத் தேவையான இடத்திற்குக் கழற்றிக்கொண்டுபோய் பொருத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மக்களுக்கான வேலியே பயிரை மேய்ந்திருப்பது குறித்து மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை இருந்த இடத்திற்கும் பெற்றுத்தருமா? என்று ஸ்காப்றோ மக்கள் கேட்கின்றனர்.
