Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இந்தியா
  • ஏஐ வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கிறது – பிரதமர் மோடி

ஏஐ வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கிறது – பிரதமர் மோடி

Malaikuruvi February 17, 2026 1 minute read
ஏஐ வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கிறது - பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறவு (ஏஐ) வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஐந்து நாள் மாநாட்டை திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஏஐ-யின் வளர்ச்சி இந்தியாவின் இலக்கையும் பொறுப்பையும் பிரதிபலிப்பதாகச் சொன்னார்.

புதுடெல்லி, பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இம்மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐநா பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கியமானவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

3,250க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், குழுவினரைக் கொண்ட 500க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெறுகின்றன. வேலைகள் முதல் சிறார்கள் பாதுகாப்புவரை பல்வேறு அம்சங்கள் குறித்து மிகப் பரந்த அளவில் விவாதிக்கப்பட உள்ளது.

“உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், ஒத்துழைப்புக்கான பெருந்திட்டம்” என்று மாநாட்டின் இலக்கை முன்னதாக, தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கு இம்மாநாடு மற்றொரு சான்றாகும். மேலும், இது இந்திய இளையர்களின் திறனைக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

“ஏஐ பற்றி விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம். இதில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புதுமைவிரும்பிகள்,கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன்,” என்றார் அவர்.

அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

“சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம், தொழில்முனைப்பு உள்ளிட்ட பல துறைகளை ஏஐ இன்று மாற்றி வருகிறது. இந்த மாநாடு புதுமை, ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றுடன் ஏஐ தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த உலகளாவிய விவாதத்தை வளப்படுத்தும்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

Post navigation

Previous: சிறையிலிருந்தபடி காதலிக்கு ஹெலிகாப்டர் பரிசு வழங்கிய சுகேஷ்
Next: தித்வா புயல் பாதிப்புகளை மதிப்பிட ஐஎம்எப் குழு வருகை

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |