ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 28) இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதலின்போது 86 வயதான கமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா? அவரது நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
