ஈரானுக்கு எதிரான போர் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக் கிறதென்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளும் இதில் நுழையும் நிலை உருவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சைப்பிரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு போர்க் கப்பலொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம், கட்டாருக்கு மேலதிக போர் விமானங்களையும் பிரிட்டன் அனுப்புகிறது. இத்தாலியும் சைப்பிரஸுக்கு விமானங்களை அனுப்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
